automobile
மகேந்திரா கார்களை வாங்கப் போறீங்களா..? சிறப்பான பம்பர் ஆஃபர்கள் இதோ..!

மகேந்திரா நிறுவனம் அதன் கார்களான தார்,பொலிரோ நியோ மற்றும் எக்ஸ்யூவி 300 மாடல்களுக்கு சுமார் 75 ஆயிரம் வரை தள்ளுபடி என பம்பர் ஆஃபர்களை அறிவித்துள்ளது.
மகேந்திரா நிறுவனம் தற்பொழுது இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களை மட்டும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எஸ்யூவி ரக கார்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் அதனால் மகேந்திராவும் எஸ்யூவி கார்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. கவரும் தோற்றமும் அசர வைக்கும் செயல்திறனையும் இந்த கார்கள் வழங்குகிறது.
உள்நாட்டு உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா அதன் உற்பத்தி வரிசையில் இருக்கும் எக்ஸ்யூவி 300, பொலிரோ நியோ,ஸ்கார்பியோ கிளாஸிக் ஸ்கார்பியோ-N,தார்,எக்ஸ்யூவி 700 மற்றும் மாறாசோ போன்ற கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்பொழுது அதில் ஒரு சில மாடல்களுக்கு மட்டும் இந்த மாதம் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதனால் பல ஆயிரங்களை நம்மால் சேமிக்க முடியும்.
எக்ஸ்யூவி 300 :

xuv 300
இந்த மாடலுக்கு தற்போது 30,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. அதிலும் இதன் பெட்ரோல் மாடல்களுக்கு மட்டும். டர்போ ஸ்போர்ட் வகைக்கு கூடுதலாக 10000 தள்ளுபடி கிடைக்கப்பெறும். இதைத் தவிர கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும் எக்ஸ்சேன்ஜ் வாகனங்களுக்கு கூடுதலாக 25 ஆயிரம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போது எக்ஸ்யூவி 300 விலை 8.40 லட்சம் ரூபாய் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.
மகேந்திரா பொலிரோ நியோ :

Mahindra Bolero Neo
புது பொலிரோ நியூ வாங்கப் போகிறீர்கள் என்றால் இதின் சிறப்பு தள்ளுபடியாக 65 ஆயிரம் வரை கிடைக்க பெறும். மேலும் நிறுவனம் இந்த வண்டிக்கான கூடுதல் பாகங்களுடன் 30 ஆயிரம் வரை தள்ளுபடியும் வழங்குகிறது. பழைய வாகனங்களுக்கான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாக 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் கார்ப்பரேட் தள்ளுபடியாக 10000 வழங்கப்படுகிறது. பொலிரோ நியோ 9.63 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்கப்பெறுகிறது.
மகேந்திரா தார் :

mahindra thar
சமீபத்தில் வெளியான தார் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கு மகேந்திர நிறுவனம் 40,000 வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதில் எக்சேஞ்ச் போனஸ் ஆஃபராக பழைய வாகனங்களுக்கு 25,000 வரை தள்ளுபடியும் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 10,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 4×2 மற்றும் 4×4 என இரு வகையிலும் கிடைக்கிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலையாக 10.54 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
மராசோ,ஸ்கார்பியோ கிளாசிக்,ஸ்கார்பியோN போன்ற கார்களுக்கு தற்போது எந்த தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
