மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது Fronx காரின் CNG வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி Fronx CNG வேரியண்ட் விலை ரூ. 8 லட்சத்து 41 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது மாருதி சுசுகி Fronx மாடலின் பெட்ரோல் வெர்ஷன்களை விட ரூ. 95 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.
புதிய CNG வெர்ஷன் சிக்மா மற்றும் டெல்டா என்று இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மாருதி சுசுகி Fronx CNG வெர்ஷனை பயனர்கள் சந்தா முறையிலும் வாங்கிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இதற்கு மாதம் ரூ. 23 ஆயிரத்து 248 செலுத்த வேண்டும்.
மாருதியின் CNG மாடல்கள் :
புதிய வெர்ஷனை சேர்க்கும் பட்சத்தில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தத்தில் 15 CNG மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில் ஆல்டோ, ஆல்டோ K10, பிரெஸ்ஸா, செலரியோ, டிசையர், எர்டிகா, ஈகோ, ஸ்விஃப்ட், எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர் உள்ளிட்டவை மாருதி சுசுகி அரினா பிரிவில் கிடைக்கும் CNG மாடல்கள் ஆகும்.
நெக்சா பிரான்டிங்கில் புதிய Fronx தவிர கிரான்ட் விட்டாரா, XL6, பலேனோ போன்ற மாடல்களில் CNG கிட் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
என்ஜின் மற்றும் மைலேஜ் விவரங்கள் :
மாருதி சுசுகி Fronx CNG வெர்ஷனில் 1.2 லிட்டர் K-சீரிஸ், டூயல் ஜெட், டூயல் VVT பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 76 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய CNG கிட் மூலம், இந்த கார் லிட்டருக்கு 28.51 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என்று மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது.
இதர அம்சங்கள் :
புதிய மாருதி சுசுகி Fronx CNG வெர்ஷன்களில் டூயல் ஏர்பேக், இ.பி.டி.-யுடன் ஏ.பி.எஸ்., ரியர் பார்க்கிங் சென்சார்கள், 7 இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபாௌக்ஸ் ஸ்கிட் பிலேட்கள் மற்றும் ஷார்க் ஃபின் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை விவரங்கள் :
மாருதி சுசுகி Fronx CNG சிக்மா MT ரூ. 8 லட்சத்து 41 ஆயிரம்
மாருதி சுசுகி Fronx CNG டெல்டா MT ரூ. 9 லட்சத்து 27 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…