automobile
என்ன லைசன்ஸ் இல்லாமலே பைக் ஓட்டலாமா?..இது என்ன புதுசா இருக்கே…

இந்தியாவில் நடக்க சாத்தியமே இல்லை என்று நினைத்த MotoGP, இந்த ஆண்டு MotoGP பாரத் என்ற பெயரில் இந்தியாவில் நடைபெறவிருப்பது இந்திய வாகன பிரியர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது. MotoGP பாரத் தொடர் உத்திரபிரதேசத்தின், நொய்டாவில் உள்ள Buddh International Circuit- ஆல் நடத்தப்படுகிறது.

atom gp1 bike
MotoGP பாரத் பற்றிய விளம்பரங்கள் நாடு முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வரவேற்புகளும் அதிகரித்தவண்ணமாக உள்ளது. இந்தியாவிலும் Racing culture பல முன்னேற்றம் கண்டுள்ளது. பலதரபட்ட மக்களிடையில் மோட்டார் ரேசிங்கின் ஆர்வம் அதிகரித்தும் காணப்படுகிறது.
மக்களின் ஆர்வத்தை புரிந்துகொண்டு அதை திறம்பட செயல்படுத்த மற்றும் தரமான வீரர்களை உருவாக்குவதையும் கருத்தில் கொண்டு, நமது கோயம்புத்தூரை சேர்ந்த CRA Motorsports, Atom GP1 race bike- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
Atom GP1 பைக்கானது 10 முதல் 17 வயதான ரேசிங்கில் ஆர்வமுள்ளவர்களுக்கானது. இந்த பைக்கானது பைக் வகைகளில் ‘mini GP motorcycle kit’ என்கிற புது வகையை உருவாக்கியுள்ளது. Atom GP1 பைக்கில் 5-ஸ்பீடு, 159.3சிசி சிங்கில் சிலிண்டர் பொறுத்தப்பட்டுள்ளது, 2-வால்வு கார்புரேட்டட் இஞ்ஜின் ஆகும். இது 15bhp power,13.85Nm torque வெளிப்படுத்தும் திறன்கொண்டது. இந்த பைக்கில் USD front fork முன் பகுதியிலும், பின்பகுதிக்கு Mono shock absorber-ம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

atom GP1
12அங்குல அலாய் வீல்களை கொண்ட இந்த பைக்கில் TVS Remora tyre பொருத்தப்பட்டுள்ளது. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் இடம்பெற்றுள்ளது.என்னடா சின்ன பிள்ளைங்க லைசன்ஸ் இல்லாம பைக் ஓட்டமுடியுமானு நினைக்காதீங்க.
இந்த பைக் ரோட்டில் ஓட்டுவதற்கு அல்ல. இது பயிற்சி மற்றும் ரேசிங்கிற்காக பயிற்சி தளங்களில் மட்டுமே உபயோகப்படுத்த முடியும். சிறுவயதிலிருந்தே moto racing பயிற்சி அளிப்பதால் எதிர்காலத்தில் தரமான வீரர்களை MotoGP-யிலும் பார்க்க முடியும். ஆனால் இந்த பைக்கின் விலை ரூ.2.75லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
