டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்ட மிகக் குறைந்த ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜெஃப் அலாட் 2006 ஆம் ஆண்டு 77 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் கூட அடிக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளில் குறைந்த ரன் அடித்த சாதனையாக இது இருக்கிறது.
இதோடு, அலாட் ஒரு நிமிடத்தில் அடிக்கப்பட்ட குறைந்த பட்ச ஸ்கோர் என்ற அரிய சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார். 101 நிமிடங்கள் களத்தில் இருந்த அலாட் ஒரு ரன் கூட அடிக்கவில்லை. தற்போது இவரது சாதனையை தந்தை, மகன் ஜோடி முறியடித்துள்ளது.
டார்லெ அபெ கிரிக்கெட் கிளப்-இன் டிவிஷன் நைன் டெர்பிஷயர் கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடிய தந்தை இயன் மற்றும் மகன் தாமஸ் இணைந்து 208 பந்துகளை எதிர்கொண்டனர். இதில் இவர்கள் வெறும் நான்கு ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். 48 வயதான இயன் 137 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் கூட அடிக்கவில்லை, மறுபுறம் மகன் தாமஸ் 71 பந்துகளில் ஒரு ரன் கூட அடிக்கவில்லை.
தந்தை மகன் ஆடிய இந்த இன்னிங்ஸில் அவர்களது அணி 45 ஓவர்களில் வெறும் 21 ரன்களை மட்டுமே அடித்தனர். இதில் 9 ரன்கள் எக்ஸ்டிரா வடிவில் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட போட்டியில் தோல்வியை தவிர்க்கவே இப்படி ஆடியதாக இயன் தெரிவித்தார். மேலும், இவ்வாறு ஆடியதால் தனது பெயர் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகியுள்ளது.