ஐயோ போச்சே! சதத்தை தவறவிட்டதால் கடுப்பான ரோஹித்…வைரலாகும் வீடியோ.!

வெஸ்ட் இண்டியன்ஸ்க்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது .  இந்த நிலையில் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபாரமாக வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கப்பட்டது.

Rohit Sharma
Rohit Sharma

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை  தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால்  முதல் போட்டியை போல இந்த போட்டியிலும் அருமையான ஒரு தொடக்கத்தை கொடுத்தனர். பிறகு ரோகித் சர்மா அரைசதம் கடந்து 80 ரன்கள் நோக்கி நகர்ந்து  ஆட்டமிளந்து வெளியேறினார்.

Rohit Sharma
Rohit Sharma

சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட காரணத்தினால் ரோஹித் ஷர்மா  சற்று எரிச்சலாகி மைதானத்தில் கோபப்பட்டார். அதற்கான சம்பவம் குறித்த வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வாரிக்கன் இவர் வீசிய பந்தை ரோஹித் ஷர்மா எதிர்கொண்டார். அவர் வீசிய பந்தை எதிர்கொண்ட ரோஹித் ஷர்மா போல்ட் ஆனார்.

போல்ட் ஆகி சதத்தை தவறவிட்டுவிட்டோமே அய்யோ அவுட் ஆகி விட்டோமே என சற்று கோபத்துடன்  பேட்டை தரையில் அடித்துக் கொண்டே செல்கிறார்” முதல் போட்டியில் ரோஹித் சர்மா சதம் விளாசிய நிலையில், இரண்டாவது போட்டியில் அதனை தவறவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment