இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் கேப்டன்சி விவகாரத்தில் எம்எஸ் டோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரிடம் உள்ள வித்தியாசம் பற்றி கூறியுள்ளார். ரவிசந்திரன் அஸ்வின் டோனி, கோலி மற்றும் ரோகித் என மூவர் தலைமையிலான இந்திய அணியில் விளையாடியுள்ளார்.
கடந்த காலங்களில் மூவரின் கேப்டன்சி குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர். அந்த வகையில், அஸ்வின் தற்போது விராட் மற்றும் டோனியை விட ரோகித் சர்மா அந்த விஷயத்தில் கெட்டிக்காரர் என கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அஸ்வின், “ரோகித் கேப்டன்சியில் இரண்டு, மூன்று விஷயங்கள் அருமையாக உள்ளன. அவர் எப்போதும் அணியின் சூழலை அழுத்தம் இன்றி வைத்துக் கொள்வார். அவர் எல்லாவற்றையும் எளிமையாக அனுகுவதை விரும்புவார். அவர் மனதை சமநிலைப்படுத்திக் கொண்டு தந்திரங்கள் அடிப்படையில் மிகவும் உறுதியாக இருப்பார்.”
“டோனி மற்றும் விராட் கோலி என இருவரும் இந்த விஷயத்தில் உறுதியாகவே உள்ளனர். எனினும், தந்திரங்கள் அடிப்படையில் டோனி மற்றும் கோலியை விட ரோகித் கைத்தேர்ந்தவர். தந்திரங்களை உருவாக்குவதற்கு ரோகித் அதிக பணியாற்றுவார். ஏதேனும் பெரி. போட்டி அல்லது தொடர் வரவிருந்தால், ரோகித் அணியின் தந்திரங்களை வகுக்கும் குழு, பயிற்சியாளருடன் உட்கார்ந்கு திட்டமிடல்களை வகுப்பார்.”
“அப்போது ஒவ்வொரு பேட்டர் மற்றும் பந்துவீச்சாளரின் பலம், பலவீனம் பற்றி ஆய்வு செய்வார். இதில் அவர் கைத்தேர்ந்தவர். இவற்றுடன் அவர் வீரர்களுக்கு ஆதராவக இருப்பார். பிளேயிங் XI-இல் அவர் தேர்வு செய்யும் வீரரை 100 சதவீதம் ஆதரிப்பார். மூன்று கேப்டன்களின் கீழ் நான் அதிகளவு கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.