இந்தியாவில் அதிக வரி செலுத்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். கடந்த 2024 நிதியாண்டில் அவர் செலுத்திய அளவுக்கு வேறு எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் வரி செலுத்தவில்லை. இந்தியாவில் அதிக வரி செலுத்தும் கிரிக்கெட் வீரர்களின் டாப் 20 பட்டியலில், ரோகித் சர்மாவுக்கு இடம் இல்லை.
விராட் கோலி மட்டும் ரூ. 66 கோடி வரி செலுத்தியுள்ளார். இவரைத் தொடர்ந்து அதிக வரி செலுத்தியவர் பட்டியலில் முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்எஸ் டோனி இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் ரூ. 38 கோடி வரி செலுத்தியுள்ளார். அதிக வரி செலுத்திய இந்திய நட்சத்திரங்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் எம்எஸ் டோனி முறையே ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளனர்.
கிரிக்கெட் உலகில் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் ரூ. 28 கோடி வரி செலுத்தியுள்ளார். இவரைத் தொடர்ந்து முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி நான்காம் இடம் பிடித்துள்ளார். இவர் ரூ. 23 கோடியை வரியாக செலுத்தியுள்ளார்.
இந்நாள் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் முறையே ரூ. 13 கோடி மற்றும் ரூ. 10 கோடி வரி செலுத்தி அதிக வரி செலுத்திய பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
ஒரே நிதியாண்டில் அதிக வரி செலுத்திய கிரிக்கெட் வீரர்கள் டாப் 5 பட்டியல்:
விராட் கோலி ரூ. 66 கோடி
எம்எஸ் டோனி ரூ. 38 கோடி
சச்சின் டெண்டுல்கர் ரூ. 28 கோடி
சவுரவ் கங்குலி ரூ. 23 கோடி
ஹர்திக் பாண்டியா ரூ. 13 கோடி