health tips
தொப்புளில் எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மை கிடைக்குமா.. இன்னைக்கே ஃபாலோ பண்ணுங்கப்பா

தொப்புளில் எண்ணெய் ஊற்றுவது ஒரு பாரம்பரிய ஆயுர்வேத முறையாகும். இதனால் உடலில் பலவிதமான நன்மைகள் ஏற்படுகிறது. பலவித மாற்றங்கள் நடக்கின்றது. உடல் இரப்பதத்தை சரி செய்கிறது, மன அமைதி ஏற்பட்டு சிறந்த தூக்கத்துக்கு வழிவகுக்கிறது. மன அழுத்தம் குறையும். மண்டை வலி, கண் உளைச்சல் குறையும்.
எந்தெந்த எண்ணையை பயன்படுத்துவதன் மூலம் உடலில் நிகழும் மாற்றங்களை பார்க்கலாம்.
நெய் அல்லது தேங்காய் எண்ணெய் :
இதனை மூன்று சொட்டு தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்து வர கண் வலி, சரும வறட்சி குணமாகும்.
விளக்கெண்ணெய் :
மூன்று சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்து வர முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி போன்றவை குணமாகின்றன.
வேப்பெண்ணெய் :
வேப்ப எண்ணையை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும் தொற்றுகளும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது
எள் எண்ணெய் (நல்லெண்ணெய்):
எள் எண்ணெயை தொப்புளில் மூன்று சொட்டு ஊற்றினால் மூட்டு வலி, உடல் வலி குறையும். உடல்களுக்கு ஈரப்பதம் கிடைக்கும்.
இந்த முறைகனை தொடர்ந்து மூன்று நாட்கள் பயன்படுத்தி உடலின் எதிர் வினைகளை நாம் கவனிக்கலாம்.
