job news
ஏர் இந்தியா நிறுவனத்தில் ஐடிஐ முதல் டிகிரி வரை படித்தவர்களுக்கு 480 பணியிடங்கள்

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட் (AIATSL) தற்போது பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:

Air India 2
பதவியின் பெயர்
மேனேஜர், டெபுடி மேனேஜர் ரேம்ப், சீனியர் சூப்பர்வைசர், ஜூனியர் சூப்பர்வைசர் மற்றும் இதர பதவிகள்.
பணியிடங்கள்: 480
கல்வித்தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் 10, 12 வகுப்புகளில் தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ தேர்ச்சி, பிஎஸ்சி, பிஇ அல்லது பிடெக் தேர்ச்சி, பட்டப்படிப்பு, எம்பிஏ என ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத்தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சமாக 55 வயது வரை இருக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம்
ரூ.500 (எஸ்.சி, எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினருக்குக் கட்டணம் கிடையாது,)
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறைப்படி தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணையளத்திற்குச் சென்று விண்ணப்படிவத்தை முழுமையாகப் படித்து பிழையின்றி பூர்த்தி செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் போதிய ஆவணங்களையும் சேர்த்து வரும் 25.05.2023 முதல் 30.05.2023 வரை நடைபெறும் நேர்காணலில் சென்று கலந்து கொள்ள வேண்டும். நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் மேலும் விவரங்கள் பற்றி அறிய கீழ்க்கண்ட லிங்கை சொடுக்குங்கள்.
Download Notification PDF
