job news
ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 168 அப்ரண்டீஸ் பணியிடங்கள்

சென்னையை அடுத்த ஆவடி அருகே இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனம் கனரக வாகன தொழிற்சாலை. இந்த நிறுவனம் டிரேடு அப்ரண்டீஸ்கான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:

Avadi HVF logo
பதவியின் பெயர்: டிரேடு அப்ரண்டீசஸ்
பணியிடங்கள்: 168
இவை பிட்டர் (நான் ஐடிஐ) – 32, மெஷினிஸ்ட் (நான் ஐடிஐ) – 36, வெல்டர் (நான் ஐடிஐ) – 24, எலக்ட்ரீசியன் (எக்ஸ் ஐடிஐ)- 10, மெஷினிஸ்ட் (எக்ஸ் ஐடிஐ) – 38, வெல்டர் (எக்ஸ் ஐடிஐ)- 28 என ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பணிக்குச் சம்பந்தமான துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத்தகுதி
14.6.2023ம் தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 15 முதல் அதிகபட்சமாக 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்
நான் ஐடிஐ (மெட்ரிக்குலேசன், பத்தாம் வகுப்பு) பிரிவினருக்கு முதல் ஆண்டில் ரூ.6000ம், 2ம் ஆண்டில் 6600ம் வழங்கப்படும். எக்ஸ் ஐடிஐ (ஐடிஐ தேர்ச்சி) பெற்றவர்களுக்கு முதல் ஆண்டில் ரூ.7700ம், 2ம் ஆண்டில் ரூ.8050ம் வழங்கப்படும்.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100ம்,
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் பின்வரும் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அதை கீழ்க்கண்ட முகவரிக்கு வரும் 14.6.2023ம் தேதிக்குள் அனுப்பி விட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
https://avnl.co.in/assets/docs/hvfta58.pdf
