இந்திய அரசின் உணவு வழங்கல் துறையின் கீழ் இயங்கும் இந்திய தர நிர்ணய அமைப்பு(BIS) தற்போது எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான காலி பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி:
இப்பணிக்கான விண்ணப்பங்களை வருகின்ற 21.07.2023க்குள் இதன் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
காலிபணியிடம்:
- Management Executives for SCMD – 01
- Management Executive for TNMD – 01
கல்விதகுதி:
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இன்ஜின்யரிங் பட்ட படிப்பினை பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஃபினான்ஸ்/மார்க்கெட்டிங்/எச்.ஆர்/ஜெனரல் போன்ற ஏதேனும் ஒரு துறையில் எம்பிஏ பட்ட படிப்பினையும் பெற்றிருத்தல் வேண்டும்.
- மேலும் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.
தேர்வு நிலை:
இதற்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பகட்டணம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்த வித கட்டணமும் கிடையாது.
மாதவருமானம்:
இப்பணிக்கு சம்பளமாக ரூ.1.5லட்சம் வழங்கப்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணவும்.
https://www.bis.gov.in/wp-content/uploads/2023/06/New-Advertisement-for-ME-4-2023-24-SCMD-TNMD.pdf




