உங்களுக்கு நல்ல யோகம்…! உடனே கப்பற்படைக்கு விண்ணப்பிங்க… வேலை உங்களுக்குத் தான்..!!

நம்பிக்கை தான் வாழ்க்கை. அதானே எல்லாம். எப்போதும் சோர்வாக இருப்பவர்களுக்கு புத்துணர்ச்சி தருவதே இந்த நம்பிக்கை தான். இது தான் நமக்கு தன்னம்பிக்கையாக மாறி நம் செயலுக்கு உந்து சக்தியை அளிக்கிறது.

எடுத்த உடனே எங்கே நமக்கெல்லாம் இந்த வேலை கிடைக்கப்போவுது? அதுதான் லட்சக்கணக்கானவங்க போட்டுருப்பாங்களேன்னு அவநம்பிக்கை வந்தால் உங்களுக்கு கிடைக்காது. லட்சத்தில் ஒருவனாக, ஆயிரத்தில் ஒருவனாக நான் வருவேன்.

அதற்கான முயற்சிகளை எடுப்பேன். எத்தனை போட்டித் தேர்வுகள் வைத்தாலும் அதை நான் தைரியமாக எதிர்கொள்வேன் என்று தன்னம்பிக்கையுடன் நீங்கள் முயற்சி செய்தால் நீங்கள் தான் அந்த யோகக்காரர். அந்த வகையில் உங்களுக்கும் யோகம் கிடைக்க வந்துவிட்டது மத்திய அரசு வேலை.

Indian Navy logo

இந்திய கடற்படையில் அக்னி வீரராக சேர்வதற்கு மணமாகாத விண்ணப்பதாரர்களிடம் (இருபாலரும்) இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:

பதவியின் பெயர்: அக்னிவீரர்

மொத்த பணியிடங்கள்: 1365

கல்வித்தகுதி

மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிக் கல்வி நிறுவனங்களில் இருந்து 10+2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் என ஏதேனும் ஒரு பாடத்தில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத்தகுதி

விண்ணப்பதாரர் 1.11.2002 முதல் 30.4.2006ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுத்தளர்வு உண்டு.

தேர்வு முறை

விண்ணப்பதாரர் எழுத்துத்தேர்வு மற்றும் பிஎப்டி மற்றும் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேர்வு கட்டணமாக ரூ.550 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும், திறமையும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட இணையதளத்திற்குச் சென்று 15.6.2023ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து விட வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு:

Download Notification 2023 Pdf

Leave a Comment