வங்கி வேலைக்காக காத்திருப்பவரா?..இதோ உங்களுக்காக ஃபெடரல் வங்கியில் ஆபிஸர் வேலை..பிஜி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

இந்தியாவில் உள்ள பிரபல தனியார் வங்கியான ஃபெடரல் வங்கி தற்போது ஆபிஸர் பதவிக்கான பல்வேறு காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி:

இப்பணிகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக வரும் 15.07.2023க்குள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சமர்ப்பித்து கொள்ளலாம்.

பணியின் பெயர்:

ஆபிஸர் இன் ஜுனியர் மேனேஜ்மெண்ட் கிரேடு I

வயது வரம்பு:

இப்பணிக்காக விண்ணப்பிப்பவர்கள் 27 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 32 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி:

ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில்  60% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பினை பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மாதவருமானம்:

இப்பணிகளுக்கு மாதவருமானமாக ரூ.68000 வழங்கப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணம்:

  1. தாழ்த்தப்பட்டோர்/ பழங்குடியினர் – ரூ.700/-
  2. மற்றோருக்கு – ரூ.140/-

தேர்வு நிலை:

  1. ஆன்லைன் தேர்வு
  2. நேர்காணல்

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

https://www.federalbank.co.in/documents/10180/488552537/Notification.pdf/99e50b32-d527-8031-f2bb-20e23bdc2760?t=1687846603492

அதிகாரப்பூர்வ இணையதளம்:

https://www.federalbank.co.in/career

Leave a Comment