கர்ப்பிணி பெண்ணை நிர்வாணமாக்கி இழுத்து சென்ற அதிர்ச்சி சம்பவம்… கணவர் உட்பட 17 பேருக்கு ஆயுள் தண்டனை! கைது!

0
214

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரை நிர்வாணம் ஆக அடித்து துன்புறுத்திய கணவர் உட்பட 17 பேருக்கு ஆயுள் தண்டணை வழங்கி நீதிமன்றம் அதிரடி காட்டி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரதாப்கர் மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு திருமணம் தாண்டிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் அப்பெண், கடந்த செப்டம்பர் மாதம் தன்னுடைய காதலரை நேரில் சென்று பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கணவர் கடும் கோபம் அடைந்திருக்கிறார்.

அப்பெண்ணை நடுரோட்டில் அடித்து துன்புறுத்தி நிர்வாணமாக இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண் தன் கணவர் உட்பட 17  பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். உடனே அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன. அந்த வழக்கு ராஜஸ்தான் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடுமையான குற்றம் நடந்துள்ளது. இதேதான் மணிப்பூரிலும் நடந்தது. இத்தகைய குற்றங்கள் பெண்களை பாதிக்கும். இதனால் இது தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தெய்வமாக பாவிக்கப்படும் பெண்களுக்கு தொடர்ந்து இத்தகைய பாதக செயல் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 14 பேருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 3பெண்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here