cinema
எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை…கெரளவ குறைச்சலே இது…அறிக்கை வெளியிட்ட ஜெயம் ரவி மனைவி…

“ஜெயம்” ரவியும், அவரது காதல் மனைவி ஆர்த்தியும் பிரியப் போகிறார்கள் என கோலிவுட் வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாகவே செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் தனது மனைவியை பிரிவதாக அறிவித்த நடிகர் “ஜெயம்”ரவி, விவாகரத்து மனுவை சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் வழங்கியுள்ளார்.
இதன் மீதான விசாரணை அடுத்த மாதம் பத்தாம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விஷயம் குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார் “ஜெயம்”ரவியின் மனைவி ஆர்த்தி.
அந்த அறிக்கையில் தனது திருமண வாழ்க்கை குறித்த செய்திகள் ஊடகங்களில் அறிக்கை வெளியானதை பார்த்து தான் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாகவும்.

Jayam Ravi Family
இது முழுக்க, முழுக்க தனக்கு தெரியாமலும், தனது ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று எனவும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் நம்பிக்கையில் கடந்த பதினெட்டு ஆண்டுகள் “ஜெயம்”ரவியுடன் வாழ்ந்து வந்த வாழ்க்கை இந்த அறிக்கையால் கெளரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக தான் உணர்வதாக சொல்லியிருக்கிறார்.
தனது கணவர் “ஜெயம்”ரவியை சந்தித்து,மனம் விட்டு கடந்த சில நாட்களாக முயற்சி செய்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும், ஆர்த்தியும் அவரது இரண்டு மகன் களும் என்ன நடக்கிறது என்று புரியாமல் தவித்து வருவதாகவும், திருமண பந்தத்தில் இருந்து விலகுவது குறித்த முடிவு முழுக்க, முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்தே”ஜெயம்”ரவி எடுத்துள்ளதாரே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு இல்லை எனவும் நடிகர் “ஜெயம்”ரவியின் மனைவி ஆர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.
