latest news
அதெல்லாம் உண்மை இல்லை…எடப்பாடி பழனிசாமி காட்டம்?…

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக கட்சி என்பது கடல் போன்றது, அதில் அயிரக்கணக்கானோர் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தமிழகத்தில் முப்பது ஆண்டுகள் ஆட்சி நடத்திய, பொன் விழா கண்ட கட்சி என சொன்னார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் ‘செஞ்சி’ ராமச்சந்திரன் நடிகர் விஜய் புதிதாக துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இணையப்போவதாக செய்தி வெளியானதாக பேட்டியின் போது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

Vijay
அப்போது இது குறித்து தனக்கு இதுவரை எந்த விதமான தகவலும் வரவில்லை என்றார், இது உண்மைக்கு புறம்பான செய்தி என்றும் அது கிளப்பிவிடப்பட்ட புரளி என்றும் பதிலளித்தார்.
அதோடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது வலுவான கட்சி என்றும், தமிழகத்தில் முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. தனது கட்சி பொன் விழா கண்ட கட்சி என்றும் குறிப்பிட்டார்.
அதோடு மட்டுமல்லாமல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது கடல் போன்றது. ‘செஞ்சி’ ராமச்சந்திரன் போல ஆயிரக்கணகானோர் அங்கம் வகித்தும், உழைத்தும் வருகின்றனர் என பதிலளித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் வசதி குறைபாடுகள் இருப்பதாக அன்மையில் பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார்.இது குறித்த கேள்விக்கு பதிலளித்த பழனிசாமி, மாணவர்களின் குறைபாடுகளையே தான் எடுத்துக் கூறியதாகவும், இது குறித்து அரசு முழுமையான விசாரணை மேற்கொண்டு மாணவர்களின் குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொன்னார்.
