latest news
OTT உபயோகிப்பவரா நீங்கள்?..இதோ உங்களுக்கான ஏர்டெலின் அருமையான திட்டம்..பயன்படுத்தி கொள்ளுங்க..

பாரதி ஏர்டேல் மக்களிடையே அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களுக்கு பெயர் பெற்றது. இந்த நிறுவனம் மிக சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை அளிப்பதால் மக்கள் பெரும்பாலும் இந்த நிட்வொர்க்கையே விரும்புகிறனர். இந்த நிறுவனம் தற்போது தனது ரீசாஜ் திட்டங்களில் 15 வகையான OTT தளங்களை இலவசமாக அனுபவிக்கும்படியான வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

airtel offer more than 15 ott apps
இதன் விலை ரூ.148 மட்டுமே ஆகும். இதன் மூலம் நாம் 30 நாட்களுக்கு OTT தளத்தினை உபயோகித்து கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தின் மூலம் நாம் தினமும் 1ஜிபி வரையிலான டேட்டாவையும் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தினை நாம் நமது பழைய ரீசார்ஜ் திட்டத்துடன் சேர்த்தே உபயோகிக்கலாம். ஒருவேளை நீங்கள் அதிக டேட்டாவை உபயோகிப்பவர்களாக இருந்தால் உங்களுக்கு டேட்டா மட்டுமே வேண்டும் என்றால் நீங்கள் இந்த திட்டத்திற்கு பதிலாக ஏர்டெலின் மற்ற திட்டங்களில் கவனம் செலுத்தலாம்.

ott apps
இந்த திட்டத்தின் மூலம் நாம் கீழே உள்ள OTT தளங்களை உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் நாம் சோனி லைவ், மனோரமாமேக்ஸ், ஏர்டெல் எக்ஸ்டிரீம் ப்ளே, லயன்ஸ்கேட் ப்ளே, Hoichoi மற்றும் Eros போன்ற பல்வேறு OTT தளங்களை 30 நாட்களுக்கு இலவசமாக காணலாம். ஆனால் இந்த ரூ.148 திட்டத்தின் மூலம் நாம் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ் போன்ற வசதிகளை அனுபவிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் OTT தளத்தை உபயோகிப்பவர்கள் என்றால் இந்த திட்டத்தினை உபயோகித்து கொள்ளலாம்.
