latest news
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பெண் குற்றவாளி ஆஜர்…காவல் விசாரணைக்கு மனு?…
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். மாநகரின் முக்கிய பகுதியில் வைத்து நடந்த இந்த படுகொலை சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. கொலையில் தொடர்புடடையதாக பதினோரு பேர் சரணைடைந்த நிலையில் விசாரணைக்கு அழைத்து செல்லும் வழயில் காவல் துறையினரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி திருவேங்கடம் போலீஸாரால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.
கொலை வழக்கின் விசாரணையை காவல் துறையினர் முடிக்கிவிட்டனர். அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு இந்த கொலை வழக்கிற்கும் தொடர்பு இருப்பதாக கருதிய காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பெண் பிரமூகர், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகியின் மகன், தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி என அரசியில் தொடர்புடைய நபர்கள் காவல் விசாரணைக்கு ஆளாக்கப்பட்டனர்.
வழக்கில் தொடர்புடையதாக கருதப்பட்ட அரசியல் கட்சி நபர்களை அவர்கள் சார்ந்திருந்த கட்சித் தலைமைகள் கட்சியை விட்டு நீக்கியது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் பெண் நிர்வாகிக்கும் இந்த கொலை சம்பவத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக எண்ணிய காவல் துறை அவரை கைது செய்தது. இதனையடுத்து அந்த பெண் நிர்வாகியான அஞ்சலை நீதி மன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உட்பட பன்னிரெண்டு வழக்குகளில் தொடர்பு இருப்பதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அஞ்சலை மீதான வேறு ஒரு வழக்கிற்காக அவர் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தமிழகத்தையே உலுக்கிய ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில் தொடர்புடையவாராக அஞ்சலை பார்க்கப்படுவதால் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது கடுமையான பாதுகாப்பு நீதிமன்றத்தை சுற்றி காவல் துறையினரால் போடப்பட்டது. மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக அஞ்சலையை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறை சார்பில் விரைவில் மனு அளிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.