cinema
திருப்தி கொடுத்த லப்பர் பந்து!…ஆனந்தப்பட்ட அஷ்வின்…

இந்திய அணியின் ஆல்-ரவுண்டரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிராக பேட்டிங்கில் சதமடித்து அசத்தினார். அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
போட்டி துவங்கியதும் இந்திய அணியின் விக்கெட்டுகள் மலமலவென சரியத் துவங்கிய நிலையில் பொறுப்புடன் ஆடி டெஸ்ட் போட்டிகளில் சென்னையில் தனது இரண்டாவது சதத்தினை பூர்த்தி செய்தார் அஷ்வின். இவருக்கு துணையாக மறுமுனையில் பொறுமையுடன் ஆடிய மற்றொரு ஆல்-ரவுண்டரான ஜடேஜாவும் என்பத்தி ஆறு ரன்களை குவித்து அசத்தினார்.
அதோடு மட்டுமல்லாமல் அஷ்வினைப் போலவே பவுலிங்கிலும் அசத்தி வங்கதேசத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தார். கடந்த வாரம் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியான “லப்பர் பந்து” படம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் அஷ்வின்.
படத்தின் இயக்குனரை வெகுவாகப் பாராட்டியதோடு மட்டுமல்லாது, படத்தில் நடித்துள்ள அத்துனை பேருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அஷ்வின் சொல்லியிருக்கிறார்.

Lubber pandhu
‘அட்டகத்தி’ படத்தின் மூலம் பிரபலமான தினேஷ், ஹரிஷ் கல்யான், ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள “லப்பர் பந்து” படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் அஷ்வினும் “லப்பர் பந்து” படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
‘கெத்து’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள தினேசும், ஹரீஸ் கல்யானும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர்கள் நடித்திருக்கின்றனர். படத்தின் கதைக்களம் கிரிக்கெட் விளையாட்டை வைத்து இயக்கப்பட்டிருக்கிறது.
