நீங்கள் இந்தியரா?….ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பியுள்ள ஹெச்.ராஜா…

0
147
Rahul Raja
Rahul Raja

பாரதிய ஜனதா கட்சயின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களின் சந்திப்பின் போது எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பற்றி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டிருந்தார். பேட்டியின் போது நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடித்த திரைப்படத்தில் வரும் பாடல் வரிகளை மாற்றிப்பாடி ராகுலை விமர்சித்தார்.

சாதி குறித்து நாடாளுமன்றத்தில் பேசியிருந்த கனிமொழி, திராவிட மாடல் அரசு ஒருவரின் ஜாதியை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாது, ஆனால் பாஜக அரசு அதன் மீது ஆர்வம் காட்டுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து விளக்கமளித்துள்ள ஹெச்.ராஜா நாடு முழுவதும் ஜாதிவாரியான கணக்கீடு எடுக்கப்பட வேண்டும் என அன்மையில் நாடாளுமன்ற எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி பேசியதை சுட்டிக்காட்டினார்.

Kanimozhi
Kanimozhi

அப்படி ஜாதி வாரியான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால் இந்தியாவில் உள்ள நூற்றி நாற்பது கோடி பேரின் ஜாதியை பற்றி கேட்க வேண்டியது இருக்கும். இப்படி இருக்கையில் அனுராக் தாக்கூர் பேசியது குறித்து விமர்சித்துள்ள எம்.பி.கனிமொழி, ராகுல் காந்தி கணக்கெடுப்பு பற்றி பேசியதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தியிடம் நீங்கள் இந்தியரா? அல்லது இத்தாலியரா என கேட்க வேண்டியது வரும், ராகுலின் தந்தை இந்தியர், தாயார் இத்தாலியர் என்பதால் என சொன்ன ஹெச்.ராஜா “ஆளவந்தான்” படத்தில் வரும் ‘கடவுள் பாதி, மிருகம் பாதி’ பாடலின் வரிகளை மாற்றி ‘இந்தியர் பாதி, இத்தாலியர் பாதி’ என பாடிக்காட்டி ராகுலை விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம் ஜாதிகளை களைய வேண்டும் என்றால் ராகுல் காந்தி  எதற்காக ஜாதி வாரியான கணக்கீடு எடுக்கப்பட வேண்டும் எனச் சொன்னார் என்று  கனிமொழி கேட்பாரா? என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here