cinema
சமரசத்துக்கு சம்மதம் சொன்ன திரிஷா!…வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்……

தமிழ் சினிமாவில் முன்னனி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் திரிஷா. இருபது ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமான திரைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் இவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
விஜய் நடித்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் “தி கோட்” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் திரிஷா. மெகா ஹிட்டான இந்த பாடல், ரீல்சுக்காக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது இப்போது. அஜீத்துடன் நடித்து இயக்கப்பட்டு வரும் “விடாமுயற்சி” படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடித்து வரும் “தக்-லைஃப்” படத்திலும் திரிஷா தற்போது நடித்து வருகிறார்.

The Goat
இந்நிலையில் திரிஷா குடியிருந்து வரும் அடுக்கு மாடி குடியிருப்பில் மதில் சுவர் இடிக்கப்படுவது குறித்து திரிஷாவிற்கும் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் மெய்யப்பன் என்பவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
தனது வீட்டின் கட்டமைப்பிற்கு தடையாக இருந்த பொது மதில் சுவரை அண்டை வீட்டுக்காரரான மெய்யப்பன் இடிக்க முயன்றுள்ளார். சுவரை இடிப்பதற்கு நிரந்தர தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுவரை இடிக்க இடைகால தடை விதித்தது. இந்த சூழலில் இந்த வழக்கு விஷயத்தில் பக்கத்து வீட்டுக்காரர் மெய்யப்பனுடன் சமரசம் செய்து கொள்வதாக திரிஷா தெரிவித்த நிலையில், இந்த வழக்கு முடித்து வைத்துள்ளது நீதி மன்றம். பேச்சு வார்த்தை மூலமாக இருவரும் சுவர் குறித்து சமரசமாக செல்ல முடிவு எடுத்துள்ளதாக திரிஷா தரப்பு வாதத்தில் தெரிவிக்கப்பட்டதால் வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
