latest news
பெங்களூரு கூட்ட நெரிசல்..100 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆதங்கம்

18 வருடங்கள் கழித்து ஆர் சி பி அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. இதுவரை மூன்று முறை ஐபிஎல் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியுற்று ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து இருந்த ஆர் சி பி அணி ஒரு வழியாக கோப்பையை கைப்பற்றியது.
இனி ஆர்சிபி அணியால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது என்று பலரும் பலவிதமாக சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில் இந்தப் பதினெட்டாவது சீசனில் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஜெர்சியின் நம்பர் 18 இரண்டு ஒரு சேர இந்த அற்புத நிகழ்வு நடந்துள்ளது. அகமதாபாத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற ஆசிபி அணி அதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டது.
ஐபிஎல் அணிகளில் அதிகமாக ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள அணி ஆர் சி பி அணி தான். ஐந்து முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் கோப்பைகளை வென்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தாலும் அதற்கு நிகராக ரசிகர் படையை ஆர் சி பி அணியும் வைத்துள்ளது.
17 முறை தோற்ற போதிலும் அவர்களுக்கான ரசிர்களின் கூட்டம் என்றும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு செல்கிறது. இந்த அளவு கடந்த அன்புக்காக வென்ற கோப்பையை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நினைத்தது ஆர்சிபி அணி. அதற்காக பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் கர்நாடகா அரசு சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

rcb
இவர்களை காண கட்டுக்கடங்காத கூட்டம் வந்தது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான படுகாயம் அடைந்தனர். துரதிஷ்டவசமாக 11 பேர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் குறித்து பலரும் பல கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் கிரிக்கெட் வீரர் மதன்லால்,
“விராட் கோலியை மக்கள் மறக்க மாட்டார்கள் வெளியே மக்கள் இறந்து கொண்டிருந்தபோது உள்ளே கொண்டாட்டம் நடைபெற்றது. இறந்தவர்களின் குடும்பங்கள் இந்த துயரமான விபத்துக்காக ஆர் சி பி நிர்வாகம் மட்டும் மாநில அரசு மீது 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
