பயணி ஒருவர் தலையில் இருந்த பேன்னை குறையாக சொல்ல அதனை அடுத்து விமானம் தரையறக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்கா நாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து நியூயார்க்கை நோக்கி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் திடீரென தரையிறக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஜூன் 15 அன்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 2201 நியூயார்க்கிற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் இருந்து கிளம்பியது.
அதில் ஒரு பெண் பயணிக்கு மருத்துவ அவசரம் காரணமாக பீனிக்ஸில் தரையிறங்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த விமானத்தில் பயணித்த ஜுடெல்சன் என்பவர் தன் டிக்டாக் பக்கத்தில் அப்போது நடந்ததை வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில், ’கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நானும் புறப்பட்டேன். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், இரு பெண்கள், பணிப்பெண்ணை அழைத்து ஏதோ புகார் கூறினார்கள்.
பின்னர் விசாரித்த போது அந்த இரு பயணிகள் அருகில் இருந்த ஒரு பெண்ணின் தலையில் பேன் இருந்ததாக பணிப்பெண்ணிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவரும் அதை சோதித்துப் பார்த்து உறுதி செய்து கொண்டவுடன் பீனிக்ஸ் விமானம் தரையிறங்கியது. எங்களுக்கு ஹோட்டல் அறை ஒதுக்கப்பட்டது.
12 மணி நேர தாமதத்துக்கு பின்னரே அந்த விமானம் கிளம்பியதாக கூறப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.