உத்திர பிரதேசத்தினை சேர்ந்த அலிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், கடன் பிரச்னையால் பிறந்த பெண் குழந்தையை, காசுக்கு விற்ற தந்தை குறித்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது.
குழந்தை இல்லாத தம்பதியருக்கு பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை தந்தை ரூ.56,000க்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தாயின் புகாரால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் தந்தை சரண் சிங், மற்றும் பெண் குழந்தையை வாங்கிய தம்பதியினரை கைது செய்துள்ளனர்.
கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் ஆர்னி கிராமத்தைச் சேர்ந்த அனிதா தேவி என்பவர் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து சில மணிநேரத்தில் குழந்தை காணாமல் போனதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசாருக்கு புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், பிறந்த குழந்தையின் தந்தைக்கு கடன் இருந்துள்ளது. அதனால் காசுக்காக குழந்தையை விற்க முடிவெடுத்துள்ளார். தாய் கதறி அழுததையடுத்து குழந்தை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புகார் கொடுக்க விருப்பப்படவில்லை என தாய் எழுத்துப்பூர்வமாக கொடுத்த மனுவை வைத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டன. இரு தரப்பினரும் காவல் நிலையத்திற்கு வெளியே சமரசம் செய்து கொண்டதை அடுத்து, வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.