Finance
சனிக்கிழமை அதுவுமா சங்கடத்தை தந்துள்ளதா தங்கம் விலை?…
இந்த மாதத் துவக்கத்திலிருந்தே தங்கத்தின் விற்பனை விலையில் மாற்றங்கள் இருந்து கொண்டே தான் இருந்து வருகிறது. இந்த நிலையில்லாத் தன்மை நகை பிரியர்களை ஒரு புறம் சோகத்திலும், மறுபுறம் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விற்பனை விலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளியின் விற்பனை விலையிலும் தங்கத்தை போலவே உயர்வு காணப்பட்டது. சென்னையில் விற்கப்படும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஆராயிரத்து என்னூற்றி அறுபத்தி ஐந்து ரூபாயாக (ரூ.6,865/-) உள்ளது.
நேற்றைய விலையை விட இன்று கிராமிற்கு நாற்பது ரூபாய் உயர்வை கண்டுள்ளது தங்கம் விலை. இதனால் ஒரு சவரனுக்கு முன்னூற்றி இருபது ரூபாய் (ரூ.320/-) உயர்வும் ஏற்பட்டுள்ளது. இன்று சென்னையில் விற்கப்படும் ஒரு கிராம் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஐம்பத்தி நாலாயிரத்து தொல்லாயிரத்து இருபது ரூபாயாக (ரூ.54,920/-).
வார இறுதி சனிக்கிழமையான இன்று ஏற்பட்டிருக்கும் இந்த விலை உயர்வு ஆபரணப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கத்தை போலவே தான் வெள்ளியின் விற்பனை விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது இன்று.
நேற்றைய விற்பனை விலையை விட இன்று கிராமிற்கு இரண்டு ரூபாய் உயர்ந்து விற்பனையாகி வருகிறது வெள்ளி. இதனால் ஒரு கிராம் வெள்ளியின் விலை தொன்னூற்றி ஏழு ரூபாயாக (ரூ.97/-) இருக்கிறது இன்று. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து தொன்னூற்றி எழாயிரம் ரூபாயாக உள்ளது.
ஏறுமுகத்திலேயே இருந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை இறங்குமுகத்திற்கு வருமா? என்ற எதிர்ப்பார்ப்பும் ஓங்கி வருகிறது தங்கம், வெள்ளி வாங்க நினைப்பவர்களின் மனதில்.