விசா மற்றும் பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவது எப்படி என்பதை யூடியூபர் ஒருவர் வீடியோவாக போட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போதைய டிஜிட்டல் காலத்தில் எதை வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள யூடியூபர் உள்ளது. குழந்தை பேரு முதல் கடத்தல் வரை எல்லாவற்றையும் யூட்யூபில் பார்த்து கற்றுக்கொண்டு செய்தும் வருகின்றனர். டி எச் டிராவலிங் இன்போ என்ற யூடியூபர் சேனலை ஒருவர் நடத்தி வருகிறார்.
அவர் வெளியிட்டிருந்த ஒரு வீடியோவில் வங்கதேசத்தின் சுனம்காங் சாலையில் நின்று கொண்டிருக்கிறார். பின்னர் அவர் குறிப்பிட்ட சாலை ஒன்றைக் காட்டி இதன் மூலம் இந்தியாவிற்குள் விசா மற்றும் பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம் எனவும் தெரிவிக்கிறார். சுனம்காங் பகுதி இந்தியாவின் எல்லையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் எல்லைப் படை வீரர்களையும் அந்த வீடியோவில் காட்டுகிறார். பின்னர் ஒரு சுரங்க பாதையை காட்டி இதன் மூலம் இந்தியாவிற்குள் நுழையலாம் எனவும் தெரிவிக்கிறார். இது முன்னாடி பழங்குடியினர் பயன்படுத்திய பாதை என்றும், இதன் மூலம் மாடுகள் கடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இதையெல்லாம் சொல்லிவிட்டு இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழையக்கூடாது. அப்படி நுழைந்து வங்கதேசத்திற்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதை இவர் சேனலின் பழைய வீடியோ என்றாலும் தற்போது மீண்டும் வைரலாக தொடங்கி இருக்கிறது.
இரண்டு மில்லியன் வியூஸ் மற்றும் 7000 லைக்குகளை கொண்டுள்ள இந்த வீடியோ தற்போது பரபரப்பாக பேசப்பட்டவர்கள். யூடியூபில் ஒருவருக்கு தெரிந்து விட்டால் உலகத்திற்கே தெரிந்து விடுமே. காவல்துறை இதில் இவ்வளவு வளர்ச்சியும் காட்டியது நாட்டின் பாதுகாப்பிற்கே பங்கம் விளைவித்து விடும் எனவும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன.