health tips
உங்களுக்கு வெயில் காலத்தில் முடி கொட்டுதா?.. இனி கவலையே வேணாம்.. இத மட்டும் ஃபாலோவ் பண்ணுங்க..

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அப்படிப்பட்ட முக அழகிற்கு கூந்தல் ஒரு முக்கியமான காரணம். அத்தகைய முடியை பராமரிப்பது சாதாரண விஷயம் அல்ல. நமது சுற்றுசூழல், மன அழுத்தம், உணவு பழக்க வழக்கங்கள் என பல்வேறு காரணங்கள் அதன் தரத்தினை தீர்மானிக்கின்றன. இப்படியான கூந்தல் வெயில் காலத்தில் அதிகமாக கொட்ட கூடிய அபாயமும் உள்ளன. எனவே இந்த வெயில் காலத்தில் நமது முடியை எவ்வாறு பாதுகாக்கலாம் என பலறும் யோசிப்பர். அவர்களுக்கான ஒரு சில டிப்ஸ் இதோ.

eat vitamin rich foods
நமது உடலுக்கு தேவையான சத்துகள் சரிவர கிடைக்காவிட்டாலும் நமது முடி உதிரும் அபாயம் ஏற்படலாம். எனவே விட்டமின் டி3, பி12, இரும்பு சத்து, ஃபெராட்டீன் போன்ற சத்துள்ள உணவு பொருட்களை உண்பதன் மூலம் நமது முடிக்கு தேவையான ஆரோக்கியத்தை நாம் பெற முடியும்.
அடிக்கடி தலைக்கு குளிக்காமல் இருப்பதால்:

wash hair less often
இந்த வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நமது முடியின் ஈரப்பதம் நெடுநேரம் இருப்பதில்லை. மேலும் நாம் குளிக்கும் நீரில் சூரிய ஒளி, குளோரின் மற்றும் உப்பு சத்துக்கள் இருப்பதால் இது நமது முடியின் ஈரத்தன்மையை கெடுக்கிறது. எனவே இந்த வெயில் காலத்தில் நாம் அடிக்கடி தலைக்கு குளிக்காமல் இருப்பது நமது முடிக்கு நன்மை பயக்கும்.
ஹீட் ஸ்டைலிங்கை தவிர்ப்பது:

avoid heat styling
வெயில் காலங்களில் பொதுவாக ஹீட் ஸ்டைலிங்கை தவிர்ப்பது நமது முடிக்கு ஆரோக்கியத்தை தரும். எனவே நாம் கண்டிப்பாக ஹீட் ஸ்டைலிங் பண்ண வேண்டும் என்றால் அதற்கு முன் ஹீட் ப்ரொடக்டண்ட் ஸ்பிரையை உபயோகிப்பதால் முடிக்கு நன்மை உண்டாகும்.
தொடர்ச்சியாக முடி வெட்டுவதனால்:

do regular hair trimming
வெயில் காலங்களில் முடியின் நுனி வெடிப்பதனால் நமது முடியானது உதிர்கிறது. எனவே அவ்வப்போது முடியின் நுனியை வெட்டி பராமரிப்பதன் மூலம் நமது முடியை பேணி பாதுகாக்கலாம்.
எனவே மேற்கூறிய முறைகளை பின்பற்றுவது மட்டுமல்லாமல் நமது உணவிலும் தேவையான சத்துகளை சேர்ப்பதன் மூலம் நமது முடியை பாதுகாக்கலாம்.
