Cricket
இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை – ICC

இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை அணியன் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் ஜெயவிக்ரம, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒரு ஆண்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளார். இதில், ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்படுகிறார் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
ஐ.சி.சி. ஊழல்தடுப்பு விதிகளை ஜெயவிக்ரம மீறியதாக ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு தடை விதிக்கப்பட்டது. ஐ.சி.சி. விதிகள் 2.4.7-ஐ ஜெயவிக்ரம மீறியதாக ஒப்புக் கொண்டார். ஆன்டி கரப்ஷன் கோட் எனப்படும் ஏ.சி.யு. நடத்தும் விசாரணையை தாமதப்படுத்துவது, தடுப்பது, ஊழல் அல்லது முறைகேடுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் அல்லது அது தொடர்பான ஆவணங்களை தடுப்பது, தகவல்களை அழிப்பது ஐ.சி.சி. விதிகளின் கீழ் குற்றமாக கருதப்படும்.
ஜெயவிக்ரம கடைசியாக 2022 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக விளையாடினார். அவர் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடினார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் மற்றும் இலங்கை பிரீமியர் லீக் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) மற்றும் ஐ.சி.சி உடனான உடன்படிக்கையில், ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 1.7.4.1 மற்றும் 1.8.1 விதிகளின்படி செயல்பட்டது. ஐ.சி.சி. ஊழல் எதிர்ப்புக் குறியீடு மற்றும் முழு விவரங்கள் ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
