டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து வெளியான முக்கிய தகவல்…எகிறி வரும் எதிர்பார்ப்பு…

0
44
Test Match
Test Match

விளையாட்டு போட்டிகளில் உலகம் முழுவதும் தனக்கென ஒரு தனித்துவத்தை பெற்றுள்ளது கிரிக்கெட் விளையாட்டு. அதிலும் இந்தியாவை பொறுத்த மட்டிலும், இது வெறும் விளையாட்டாக மட்டும் பார்க்கப்படாமல் உணர்வாகவும் பார்க்கப்படுகிறது.

உலகத்தின் எந்த மூலையில் இந்திய அணி விளையாடினாலும் அதனை கண்டு ரசித்து தங்களது அணியை உற்சாகப்படுத்த தயங்கியதில்லை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.

இப்படிப்பட்ட வரவேற்பை பெற்றுள்ள இந்த வகையான விளையாட்டு போட்டியில் உலக சாம்பியன் பட்டத்திற்கான போட்டிகள் நடத்தப்படுகிறது. ஐம்பது ஓவர் ஒரு நாள் போட்டி, இருபது ஓவர் போட்டி, ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என மூன்று விதமாக விளையாடப்பட்டு வருகிறது கிரிக்கெட்.

ஐம்பது ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைத் தழுவி சாம்பியன் பட்டத்தை தவற விட்டாலும், அடுத்ததாக நடத்தப்பட்ட இருபது ஓவர் உலகக்கோப்பையை வென்று அசத்தியது இந்திய கிரிக்கெட் அணி.

Trophy
Trophy

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான உலக சாம்பியஷிப் போட்டி குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சர்வதே கிரிக்கெட் கவுன்சில்.

இதன்படி டெஸ்ட் போட்டிகளில் உலக சாம்பியன் பட்டத்தை நிர்ணயிக்கக்கூடிய இறுதி போட்டி நடைபெற உள்ள தேதி மற்றும் மைதானம் குறித்த தகவல் சொல்லப்பட்டுள்ளது.

இதன்படி 2025ம் ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜுன் மாதம் பதினோறாம் தேதி முதல் பதினைந்தாம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

போட்டி முழுவதுமாக நடைபெற முடியாமல் போக ஏதாவது இடையூறு வந்தால் அதற்காக ரிசர்வ் தினமாக ஜூன் பதினாறாம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  புள்ளிகளின் அடிப்படையில் இறுதிப் போட்டியில் மோதும் இரு அணிகள் தேர்வாகும்.

தற்போது வரை புள்ளிகளின் அடிப்படையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளன, இதே நிலை தொடரும் பட்சத்தில் இந்த இரு அணிகளுமே இறுதிப்போட்டியில் மோதும். இருபது ஓவர் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றது போல இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளிலும் உலக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு இப்போதே இந்திய ரசிகர்கள் மத்தியில் எகிறத்துவங்கியுள்ளது.

 

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here