cinema
இது பாடலா?…இல்ல வசனமா?…ஹிட்டாக்கிய இளையராஜா…

இளையராஜா இவரது இசைக்கு மயங்காத மனங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவில் சினிமாவில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர். இவரது இசைக்காகவே நூறு நாட்களை கடந்து ஓடிய படங்கள் ஏராளம்.
பல படங்களில் இசையில் புதுமையை படைத்திருந்தார் இவர். பாடல் ஓலித்துக் கொண்டிருக்கும் போதே இடையில் வசனங்கள் காட்சிக்கு பொருந்தும் விதமான பாடல் ஒன்றினை பிரபு நடித்திருந்த “சின்ன வாத்தியார்” படத்தில் கொடுத்திருந்தார் இளையராஜா. பிரபு இரட்டை வேடத்தில் நடித்திருந்த படம் “சின்ன வாத்தியார்”, குஷ்பூ, ரஞ்சிதா ஆகியோர் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தனர்.
இந்தப் படத்திற்கு இளையாராவின் இசையைப் போலவே வெற்றிக்கு மற்றொரு காரணமாக அமைந்தது கவுண்டமணி, செந்தில் காமெடி.
பிரபு, ரஞ்சிதா இருவருக்கும் இடையே சண்டை நடக்கும் போது பிரபு ரஞ்சிதாவை சமாதானம் செய்வது போல தான் அந்த பாடலின் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

Chinna Vaathiyaar
பிரபு ரஞ்சிதாவை வர்ணித்து பாடும் போது அதற்கு வசனங்களின் மூலம் பதிலளித்திருப்பார் பிரபு.
“என் கண்மணியே கன்மணியே சொல்லுறதை கேளு” என படத்தில் இடம்பெற்றிருக்கும் அந்த பாடல். பிரபுவுக்கு பின்னணி குரல் கொடுத்திருப்பார் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். ரஞ்சிதா பாடியது என்று சொல்லி விட முடியாது, ஆனால் பாடலின் நடுவே அவர் பேசியிருந்த வசனங்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருப்பார் ரோகிணி.
படத்தில் சுறுசுறுப்பான நாயகனாக ஒரு வேடத்திலும், கூடு விட்டு கூடு பாயும் வித்தையை பற்றி ஆராய்ச்சி செய்யும் மற்றொரு வேடத்திலும் நடித்திருந்தார் பிரபு. அந்த கதாப்பாத்திரத்திற்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருந்தார். ‘நிழல்கள்’ ரவி வில்லனாக நடித்திருப்பார்.
