பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வரும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா தொடர்ந்து தனது ஆதீக்கத்தை காட்டி வருகிறது. ஏற்கனவே துப்பாக்கி சுடுதலில் தனி நபர் பிரிவிலும், குழு பிரிவிலும் வெண்கல பதக்கத்தை வென்று அசத்தியது இந்திய அணி.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவிலான வேகத்தினை காட்டி வருகிறது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் அடுத்த அடுத்த கட்டங்களை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால் முன்பை விட இந்தாண்டு அதிக பதக்கங்களை குவித்து சாதனை படைக்குக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஐம்பது மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் பதக்கம் வென்று இந்த பிரிவில் முதல் பதக்கத்தை வென்றுள்ள இந்தியர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ஸ்வப்னில் குசால். ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் ஸ்வப்னில் குசால் நானூற்றி ஐம்பத்தி ஓரு புள்ளி நான்கு (451.4) புள்ளிகளை பெற்று வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்திருந்தார்.
ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகமான முதல் ஆண்டிலேயே சாதனை படைத்து, பதக்கப் பட்டியலை பதம் பார்த்துள்ளார் ஸ்வப்னில் குசால். 2022ம் ஆண்டு நடந்த உலக ஐம்பது மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்திருந்தார்.
இதே போல 2022 3ஆசிய விளையாட்டு போட்டி, 2023ல் நடைபெற்ற ஹாங்சோ போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார். ஒரு தங்கம், இரண்டு வெள்ளி என 2023ம் ஆண்டு அஜர்பைஜானில் நடந்த உலகக் கோப்பை போட்டி தொடரில் மூன்று பதக்கங்களை வென்று அசத்தியிருந்தார்.
1995ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி பிறந்துள்ள குசால் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடி பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார்.
ஸ்வப்னில் குசால் வென்றுள்ள வெள்ளிப் பதக்கத்தையும் சேர்த்து தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளது. மனு பாக்கர் வென்ற வெண்கலம், மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் இணை வென்ற வெண்கலம் என இதுவரை வெல்லப்பட்டுள்ள மூன்று பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலிலேயே பெறப்பட்டவை. குறி பார்த்து துல்லியமாக சுட்டு துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை புரிந்து வருவது இந்தியா முழுவதுமுள்ள விளையாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடையச்செய்துள்ளது