govt update news
என்ன!மீண்டும் 1000ரூபாய் நோட்டு திரும்ப வரபோகுதா?..ரிசர்வ் வங்கியின் முக்கியமான அறிவிப்பு..

மனிதருக்கு பணம் என்பது மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். ஒவ்வொரு மனிதரின் வாழ்வியல் ஆதாரத்திற்கு பணம் முக்கியம். இந்தியாவில் அவ்வப்போது பணமதிப்பிழப்பினை இந்திய அரசு அறிவித்து கொண்டு இருக்கிறது. இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு இந்திய அரசானது ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. பின் தற்போது ரூ. 2000த்தையும் செல்லாது எனவும் அறிவித்துள்ளது. இந்த 2000 ரூபாய் நோட்டுகளை வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் வங்கியில் முதலீடாகவோ அல்லது வங்கிகளில் மாற்றி கொள்ளவோ வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

2000 rupees demonitisation
இந்த நிலையில் சமூக ஊடகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து எடுத்தபின் ரூ. 1000 நோட்டுகளை விடப்போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. சிலர் மத்திய அரசாங்கம் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து எடுத்ததால் அதற்கு பதிலாக 1000 ரூபாய் நோட்டுகளை சந்தையில் விடப்போவதாக கூறுகின்றனர். இதனை பற்றி ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்தா தாஸ் மிக மிக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

no chance of issue 1000 rupee note
அதன்படி தற்சமயம் 1000 ரூபாய் நோட்டுகளை தயாரிப்பதாக எந்த வித எண்ணமும் இல்லை எனவும் இது வெறும் வதந்தி எனவும் கூறியுள்ளார். மேலும் சந்தையில் 500 ரூபாய்க்கு அதிகமாகவும் 2000 ரூபாய்க்கும் குறைவாகவும் பணமானது இப்போதைக்கு தேவைப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

500 rupee note
ஒருவேளை தேவைப்பட்டால் வரும்காலங்களில் 1000 ரூபாயை புழக்கத்தில் விடலாம் எனவும் மற்றப்படி இப்போதைக்கு அந்த யோசனை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால் இப்போதைக்கு நமது இந்தியாவில் மிக அதிக மதிப்பு கொண்ட பணம் ரூ. 500 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
