latest news
சவுக்கு சங்கருக்கு ஜாமுன்…வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்…

பிரபல அரசியல் விமர்சகரும், யூ-டியூபருமான சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்தின் கீழ் இவரை தமிழக காவல்துறை கைது செய்திருந்தது. இவர் நடத்தி வந்த யூ-டியூப் சேனல், மற்றும் தமிழக அரசியல் நிலவரங்கள், அரசியல் கட்சி மற்றும் அதன் தலைவர்கள்ன் பிரதிநிதிகளை விமர்சித்து தனது கருத்துக்களை சொல்லி வந்ததால் இவர் தமிழக மக்களிடையே பிரபலமடைந்தார்.
கடந்த மே மாதம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது சவுக்கு சங்கரால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏதும் உள்ளதா?, பொது அமைதிக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படுத்துகிறார் என கேள்வி எழுப்பியிருந்தது.
இப்படி இருக்கையில் சவுக்கு சங்கர் வழக்கின் மீதான விசாரணை இன்று வந்ததது.

high court
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பல்வேறு முறைகேடான தகவல்களை வழங்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குண்டர் சட்டம் போடப்பட்டது என்று வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட சவுக்கு சங்கர் தாயாரின் வழக்கறிஞர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொடர்புடைய அதே நீதிபதி, குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறு என தீர்ப்பு வழங்கியதை குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க
தொடங்கிவிட்டதால் இந்த வழக்கின் மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தியதோடு மட்டுமன்றி சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. அத்துடன் ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய மனுவை திரும்பப்பெற அனுமதி அளித்து அந்த மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.
