latest news
நேற்று அறிவிப்பு…இன்று மனு…சோகத்தில் ஜெயம் ரவி ரசிகர்கள்?…

தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகர்களில் ஒருவரான “ஜெயம்” ரவி தனது காதல் மனைவியான ஆர்த்தியுடன் திருமண உறவிலிருந்து பிரியப்போவதாக நேற்று அறிவித்திருந்தார். “ஜெயம்”ரவியின் இந்த அறிவிப்பு அவரை சோகத்தில் அழ்த்திய நிலையில் இன்று தனது மனைவியை விவாகரத்து செய்ய கோரும் மனுவினை சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழங்கியுள்ளார்.
திரைப் பின்னணியை கொண்ட குடும்பத்திலிருந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் ரவி. அவரது முதல் படமான”ஜெயம்” மிகப்பெரிய வெற்றியை பெற்றது.அதன் பின்னர் “ஜெயம்”ரவி என அழைக்கப்பட்டு வருகிறார்.
இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் முடித்திருந்தார்.

Jayam Ravi – Aarthi
கடந்த சில மாதங்களகாவே இந்த தம்பதியர் பிரியப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவத்துவங்கியது. துவக்கத்தில் இது வெறும் வதந்தியாகவே பார்க்கப்பட்டு வந்த நிலையில், நேற்று தனது மனைவியான ஆர்த்தியை பிரியப்போவதாக “ஜெயம்”ரவி அறிவித்தார்.
மிகவும் கடினமான நிலையிலே தான் இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார். “ஜெயம்”ரவியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியிருந்த நிலையில், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் தனது கோரிக்கை மனுவை வழங்கியிருக்கிறார்.
இதன் மீதான விசாரணை வருகிற அக்டோபர் மாதம் பத்தாம் தேதியன்று நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் என்றுமே தனது ரசிகர்களுக்காகவே இருக்க விரும்புவதாகவும், சிலரின் நலனுக்காகவும் தான் தனது மனைவியுடனான பிரிவை பற்றி முடிவெடுத்ததாக “ஜெயம்” ரவி நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில் சொல்லியிருந்தார்.
