cinema
நண்பர் நலமடைய விழைகிறேன்…ரஜினிக்கு கமல் விடுத்துள்ள செய்தி…

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் ரஜினி பூரண நலமடைய வாழ்த்தி வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினி நலன் பெற வாழ்த்தியிருக்கிறார்.
ரஜினி போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருக்கும் போது நெஞ்சு வலிப்பதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்க அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டது.
அதில் அடி வயிற்றில் வீக்கம் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதற்கான தீவிர சிகீட்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்குள்ளேயும் அவர் சூப்பர் ஸ்டாராகத் தான் இருக்கிறார் என மருத்துவர் தெரிவித்ததாக செய்திகள் வந்தது.

Kamal Rajini
இந்நிலையில் ரஜினி குணமடைந்து வருகிறார், அவர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் சொல்லியிருந்தது.
அவர் விரைவில் நலன் பெற வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கிறது. ரஜினியின் உற்ற நண்பரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினி பூரண நலனடைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இது குறித்த அவரது பதிவில் “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எனது அருமை நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலமடைய விழைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
