கடந்த சில வாரத்திற்கு முன்னர் கொல்கத்தாவில் பணியிலிருந்த பெண் மருத்துவர் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் தீவிரமான போராட்டங்கள் நடத்தப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டும், பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகளை தீவிரப்படுத்தக் கோரியும் போரட்டங்களின் வாயிலாக அழுத்தம் கொடுக்கப்பட்டது.
பெண் மருத்துவர் கொலை வழக்கு விசாரணையில் பல மர்ம முடிச்சுக்கள் தொடர்ச்சியாக அவிழ்ந்து வருகிறது நாளுக்கு நாள்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆதிரஞ்சன் சௌத்ரி படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோரை சந்தித்துள்ளார். சந்திப்பிறகு பின் பெண் மருத்துவரின் பெற்றோர் சொன்னதாக செளத்ரி முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை சம்பவத்திற்கு பிறகு, பெண் மருத்துவரின் பெற்றோரிடம் இறந்தவரின் உடலை உடனடியாக எரிக்க வேண்டும் என்றும், அப்படிச் செய்வதற்கு பண பேரத்தில் ஈடுபட்டதாகவும் கொல்கத்தா போலீஸ் மீது ஆதி ரஞ்சன் செளத்ரி வைக்கத்துள்ள குற்றச்சாட்டு நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மருத்துவரின் பெற்றோர் சொன்னது படி காவல் துறையினர் எதற்காக பேரத்தில் ஈடுபட்டனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வழக்கில் சஞ்சய் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தபட்டு வரும் நிலையில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் விசாரணை வட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டு அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.