ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த பெண் காவலர் மேனகாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சிகிட்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மூளை காய்ச்சல் மேனகா பாதிக்கப்பட்டிருப்ப்தாக அவரது உறவினர்களிடம் தெரிவித்திருக்கிறது மருத்துவமனை நிர்வாகம்.
இந்நிலையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மேனகா உயிரிழந்திருக்கிறார். மருத்துமனையின் அலட்சியப்போக்கே இந்த மரணத்திற்கு காரணம் என மேனகாவின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அனுமதிக்கப்பட்டதிலிருந்தே சரியான சிகிட்சை மேனகாவிற்கு வழங்கப்படவில்லை என உயிரிழந்த மேனகாவின் உறவினர்களும், நண்பர்களும் புகார் தெரிவித்திருக்கின்றார்கள்.
ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த மேனகா காவல் துறையில் பணிபுரிகிறார் என சொன்ன பிறகே மருத்துவமனையில் சிகிட்சை ஆரம்பமானது என்றும், மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிட்சையின் மீது தனக்கு திருப்தியில்லை என்பதால் தான் வேறு தனியார் மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிட்சை எடுக்கப்போவதாகவும், அதனால் தன்னை விடுவிக்கவும் சிகிட்சையின் போது மேனகா மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அவரை வெளியே அனுப்ப மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்றும் உயிரிழந்த பெண் காவலர் மேனகாவின் உறவினர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிட்சை பெற தன்னை தயார் படுத்திக்கொண்ட மேனகா, மருத்துவமனையின் வாசல் வரை வந்ததாகவும், கீழ்பாக்கம் மருத்துவமனை ஊழியர்கள் மேனகாவை கட்டாயப்படுத்தி நல்ல முறையில் சிகிட்சை தருகிறோம் என சொல்லி மேனகா அழைக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதன் பிறகே தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்திருக்கிறார் பெண் காவலர் மேனகா. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஒன்பது மாத கர்ப்பிணியான மேனகா உயிரிழந்துள்ளார். இந்த மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகமே முழுக்காரணம் என மேனகாவின் உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், மருத்துவமனையில் ஒன்பது மாத கர்ப்பிணி பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.