latest news
அவரு யாருன்னே தெரியாது…அவரை தான் வேணாம்னு சொல்லிட்டாங்களே…அதிர வைத்த அமைச்சர் சேகர் பாபு…

அம்மா உணவகம் பற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாட்டினை பற்றி முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் பட்டுப்போக செய்திருந்த திட்டம், பட்டுபோகி, கெட்டுப்போகி விடக்கூடாது என்ற பெருந்தன்மையோடு முதல்வர் ஸ்டாலின் பணிகளை செய்து வருவதை பழனிசாமி பாராட்டி இருக்க வேண்டும்.
அதை விட்டு விட்டு பழனிசாமி வசைபாடி வருகிறார். இதனை அதிமுக கட்சியினரே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார். அதிமுக ஆட்சியல அம்மா உணவகத்தில் வழங்கப்பட்ட உணவின் தரத்தை விட இப்போது தான் தரம் அதிகரித்துள்ளது என்றார்.

Sekar Babu
அதே போல அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்கினால் அதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என பழனிசாமி சொல்லியிருந்தது குறித்து பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு உதயநிதி துணை முதல்வரானால் அதை இவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும், பழனிசாமியை மக்கள் ஏற்காமல் தவிர்த்து விட்டார்கள என்றார். தமிழக முதலமைச்சரை பொறுத்த வரை இயேசு பெருமானை போல அனைவரின் மீது அன்பு காட்டக்கூடியவர் என்றார்.
அதே போல திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் தலித் மக்கள் மீதான கருத்து குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த சேகர் பாபு, ரஞ்சித் யார் என்றே எனக்கு தெரியாது என தெரியாது என்றார். அரசியலுடன் சம்பந்தப்பட்ட நபர்களை பற்றிய தனக்கு தெரியும், அதனால் ரஞ்சித் யார் என்றே எனக்கு தெரியாது என பதிலளித்தார் அமைச்சர் சேகர் பாபு.
