latest news
உதயநிதிக்கு நேரம் குறித்த அமைச்சர் அன்பரசன்…நடந்தே தீரும் என உறுதி…

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் இம்மாதம் இருபத்தி எட்டாம் தேதி பச்சையப்பன் கல்லூரி திடலில் வைத்து நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் என செய்திகள் வெளியாகி வந்த நிலையில் பொதுக் கூட்டம் குறித்த ஸ்டாலினின் அறிவுரைகளை ஸ்டாலின் வழங்கியதாக சொல்லப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரை முருகன், பொன்முடி, சாத்தார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். திடீரென நடத்தப்பட்ட கூட்டம் என்பதால் இது திமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Udhayanidhi Stalin
சமீபத்தில் சென்னையில் நடந்த திராவிட முன்னேற்றக் கழக பவள விழாவில் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம், அமைச்சர் உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ. அன்பரசன், இன்னும் பத்து நாட்களில் உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் என உறுதிபட சொல்லியிருக்கிறார். அதோடு நாளையோ அல்லது இன்னும் ஓரிரு நாட்களுக்குள் துணை முதல்வர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி விடும் என திட்டவட்டமாக சொன்னார்.
முன்னதாக தனக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது குறித்து உரிய முடிவை முதல்வர் ஸ்டாலின் எடுப்பார் எனச் சொல்லியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் அன்பரசன் பேசியுள்ளது திமுக தொண்டர்களிடையே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதிவி வழங்கப்படுவது குறித்து அதிக எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
