latest news
வோடஃபோன்-ஐடியாக்கு வந்த நிலைமைய பாருங்க..அதுக்காக இப்படியெல்லாம் பண்ணனுமா?..

வேடஃபோன் ஐடியா 5ஜி சேவையில் இன்னும் பின்தங்கியே உள்ளன. இதற்கு காரணம் இவர்களின் பொருளாதார பின்னடைவே ஆகும் என கூறலாம். எனவே மக்களை தங்கள் வசம் இழுக்க பல புதிய திட்டங்களை அறிமிகப்படுத்தி கொண்டே இருக்கின்றனர். 5ஜி சேவையில் ஈடுகட்ட முடியாத வோஃபோன்-ஐடியா(Vi) 4ஜி சேவையில் பல சலுகைகளை அறிமுகப்படுத்தி கொண்டு வருகின்றனர். அப்படியான பொன்னான திட்டங்களை பற்றி பார்ப்போம்.

#image_title
Vi Super Hour Plan:
இந்த ஆஃபரின் கீழ் நாம் ரூ.24 மட்டும் செலுத்தினால் போதும். இதன் மூலம் நாம் ரீசார்ஜ் செய்த 1 மணி நேரத்திற்கு நாம் அன்லின்மிடெட் டேட்டாவை உபயோகப்படுத்தி கொள்ளலாம். 1 மணி நேரத்திற்கு பிறகு இண்டர்நெட்டின் வேகம் நாம் ஏற்கனவே செய்த ரீசார்ஜ் திட்டத்தின்படி வேகம் குறையும்.
Vi Super Day Plan:
இதன் பெயரில் உள்ளது போலவே இதன் வேலிடிட்டியும் 1 நாள் ஆகும். மேலும் இதற்கான விலை ரூ.49 ஆகும். இதன் மூலம் நாம் ஒரு நாளுக்கு 6ஜிபி ஹை-ஸ்பீடு டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆனால் மேற்கூறிய இரண்டு திட்டங்களிலும் நாம் எந்தவித வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்.எம்.எஸ்களையும் பெற இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நிறுவனமானது தங்களின் அடிப்படை திட்டமான ரூ.99க்கான திட்டத்தினை முன்னதாக 28 நாட்களாக நிர்ணயித்திருந்தது. ஆனால் தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டியை தற்போது 15 நாட்களாக குறைத்துள்ளது. மேலும் ரூ.128க்கான திட்டத்தின் வேலிடிட்டியை 28 நாட்களில் இருந்து 18 நாட்களாக குறைத்துள்ளது. தங்களின் நிதி நிலைமையை சரி செய்ய இந்த மாதிரியான திட்டங்களை தரும் Vi நிறுவனம் தங்களின் சிறந்த 5ஜி கனவினை விரைவில் அடையுமா என பார்ப்போம்.
