நான் அவனில்லை பட பாணியில் ஐந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்ட ஆசாமியை சரியாக ஸ்கெட்ச் போட்டு காவல்துறை கைது செய்து இருக்கிறது.
ஓடிசாவைச் சேர்ந்த சத்யஜித் மனகோவிந்த் சமால்(34) என்பவர் மேட்ரிமோனியில் மாப்பிள்ளை தேடும் பெண்களை குறிவைத்து தொடர்ச்சியாக ஏமாற்றி வந்து இருக்கிறார். இதுவரை 5 திருமணங்கள் செய்துக்கொண்டு இருக்கும் சத்யஜித் 49 பெண்களை காதலித்து ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணம், பொருட்களை லாவகமாக திருடி சென்றுள்ளாராம்,
இதில் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடக்கினர்.இதைத் தொடர்ந்து பெண்களை ஏமாற்றும் மன்மதன் சத்யஜித்தை பிடிக்க புவனேஸ்வர் காவல்துறையினர் ஒரு திட்டம் தீட்டினர்.
அந்த வகையில் பெண் போலீசார் ஒருவருக்கு மேட்ரிமோனியில் திருமண வரம் குறித்து விளம்பரம் பதிவு செய்தனர். சரியாக அவர்கள் விரித்த வலையில் சத்யஜித் சிக்கினார். திருமணத்துக்கு அணுக அவரை காவலர்கள் கைது செய்தனர். விசாரணையில் பெண் காவலரை ஏமாற்றி விட்டு வெளிநாடு பறக்க திட்டமிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மேட்ரிமோனியில் இரண்டாவது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் பெண்களை குறி வைத்தே சத்யஜித் இந்த வேட்டையை நடத்தி வருகிறார். அவர்களை திருமணம் செய்து கொண்டு ஆசை வார்த்தை கூறி மயக்கி பணம் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களை திருடி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.