cinema
மார்க் ஆண்டனியா இது!..இப்படி கூட நடிச்சிருக்காரா?…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகிய படம் “மார்க் ஆண்டனி”. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்தி பலரும் அவரை பாராட்டினர். தமிழ் சினிமாவில் “வாலி” படத்தின் மூலம் தனது கால் தடத்தை பதித்தார்.
இயக்குனராக தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்திருந்தார் இவர். அஜீத்தை வைத்து “வாலி” படத்தை இயக்கிய பின்னர், விஜயை வைத்து “குஷி” படத்தை இயக்கினார். இந்த இரு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
பின்னர் நடிகராக மாறிய அவர் ஹீரோவாக நடித்தார். அதன் பின் வில்லானாக உருமாறினார். “மார்க் ஆண்டனி” படம் இவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.

Baashaa
இந்த படத்தின் பெயருக்கு பின்னால் வேறு ஒரு கதையே இருக்கிறது. ரஜினியின் சூப்பர் ஹிட் படமான “பாட்ஷா” படத்தில் வில்லானாக நடித்திருந்த ரகுவரனின் கேரக்டர் பெயர் அது.
ரஜினி ஸ்டைலான டானாக ஒரு பக்கம் கலக்கியிருக்க, ரகுவரன் தனது கொடூர வில்லத்தன நடிப்பினால் அசர வைத்திருந்தர். “புரியாத புதிர்” இயக்குனராக கே.எஸ்.ரவிக்குமாரின் முதல் படத்தில் சைக்கோ கேரக்டரில் நடித்த பின்னர் தான் இவருக்கு பாப்புலாரிட்டி கிடைத்து.
அதன் பின்னர் வில்லன் கேரக்டர்களில் அதிகமாக நடிக்கத் துவங்கி விட்டர். ரஜினியுடன் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்திருந்திருக்கிறார் ரகுவரன். ஆனால் இவர் ஆரம்பத்தில் ஹீரோவாகவே தமிழ் சினிமாவில் தனது என்ட்ரியை கொடுத்திருந்தார்.
“ஏழாவது மனிதன்” படம் தான் இவருக்கு முதல் படம் ஹீரோவாக, “ஒரு நதி ஓடையாகிறது”, “நீ தொடும்போது”, “முடிவல்ல ஆரம்பம்”, “எங்கிருந்தாலும் வாழ்க”, “மீண்டும் பல்லவி”, “மைக்கேல் ராஜ்”, “கூட்டுப் புழுக்கள்”, “கவிதை பாட நேரமில்லை”, “கலியுகம்”, தாய் மேல் ஆணை”, “கை நாட்டு”, “குற்றவாளி” போன்ற படங்களில் இவர் ஹீரோவாக நடித்திருந்தார்.
