என்னது அடுத்த ஆறு நாளைக்கு மழையா!…அலட்டா இருக்கனுமா அப்போ?…

0
27
Chennai meteorological centre
Chennai meteorological centre

சென்னை வானிலை மையம் தமிழகத்தின் தட்ப வெட்பம் மற்றும் வானிலை குறித்த தனது கணிப்பினை வெளியிட்டிருக்கிறது. இதன் படி தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வருகிற பதினோறாம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லியிருக்கிறது.

கடலோர மாவட்டங்களில் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

rain
rain

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இது அடுத்த இரண்டு தினங்களில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற பதினோறாம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தனது செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சொல்லப்படட்டிருக்கிறது.

இதே போல் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் இன்றைய தினம் (வியாழக்கிழமை) இப்பகுதி மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here