Connect with us

Cricket

அந்த ஒரு சாதனை மட்டும் போதுமாம்.. அஸ்வினின் ஆசை நிறைவேறுமா?

Published

on

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின். சர்வதேச கிர்க்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள வீரர்களில் அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மேலும், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னணி பந்துவீச்சாளராகவும் உள்ளார். இவற்றை கடந்து கிரிக்கெட்டில் படைக்க வேண்டிய ஒற்றை சாதனை என்ன என்ற கேள்விக்கு அஸ்வின் பதில் அளித்துள்ளார்.

பந்துவீச்சு தொடர்பான சாதனைகளை ஏதும் கூறுவார் என்ற எதிர்பார்த்தவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில், அஸ்வின் கிரிக்கெட்டில் பேட்டிங் தொடர்பான சாதனையை படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அஸ்வின் தான் படைக்க விரும்பும் சாதனை மற்றும் ஓய்வு பற்றியும் கூறியுள்ளார்.

“ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை அடிக்க வேண்டும், ஆனால் இதுவரை அப்படி நடக்கவேயில்லை. அப்படி எதுவும் என் மனதில் இல்லை. நான் ஒன்றை மட்டும் தான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன், வயதாகும் போது ஒவ்வொரு நாளும் கூடுதல் உழைப்பை கொடுக்க வேண்டும். கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் நான் அதிக முயற்சி செய்து வருகிறேன்.”

“ஓய்வு பற்றி நான் எதுவும் முடிவு செய்யவில்லை. ஆனால், என்னால் இதற்கும் மேல் என் திறமையை வளர்த்துக் கொள்ள முடியாது என்ற நிலையில், நான் விலகிவிடுவேன். அவ்வளவு தான்,” என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.

google news