latest news
நான் எப்பவும் சிங்கிள் தான்…கவனமாயிருங்க தம்பி…உதய நிதிக்கு அட்வைஸ் கொடுத்த சீமான்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழ் நாட்டை ஆண்டு வரும் திராவிட முன்னேற்றக் கழக அரசையும், அந்த கட்சியையும் கடுமையாக விமர்சித்தார். இதனிடையே அணை குறித்த அண்ணாமலையின் அறிக்கைக்கு சிரித்தபடியே வடிவேலு படக்காமெடியை உதாரணம் காட்டி பதிலளித்தார். இதனால் சிரிப்பலை ஏற்பட்டது.
சென்னையில் நடக்கயிருக்கும் கார் பந்தயம் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கவனமாக இருங்க என அறிவுரை வழங்கினார். விளையாட்டுத் துறை அமைச்சராக இருங்கள், விளையாட்டு அமைச்சராக இருக்காதீர்கள், தம்பி கவனமாக இருங்க எனச் சொன்னார்.
தமிழகம் இப்போது இருக்கும் நிலையில் இந்த கார் பந்தயம் தேவைதானா, இதனால் மின் கட்டணம் குறையுமா?, மாநகராட்சியில் சொத்து மற்றும் தொழில் வரி குறையுமா? என்ற கேள்வியை முன்வைத்தார்.

Udhayanidhi Stalin
கருணாநிதி என்கின்ற கங்காரு கொண்டு வந்த குட்டி ஸ்டாலின் என்றும், அவரைப்போல ஸ்டாலின் என்ற கங்காரு அரசியலுக்கு கொண்டு வந்துள்ள குட்டி உதயநிதி என உதயநிதியை அடுத்த முதல்வராக்க வேலை நடந்து வருகிறதாக சொல்லி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.
இதேப் போல சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலையின் அணை குறித்த கேள்விக்கு இது என் பங்காளி மாதிரித்தான் பதில் சொல்ல வேண்டும். இங்க இருந்த கிணற்றை காணோம் என நடிகர் வடிவேலுவின் திரைப்பட நகைச்சுவை வசனத்தை உதாரணமாக சொல்லி பதிலளித்தார். அதே போல ஆளும் கட்சி, எதிர்கட்சி இருவரும் கூட்டணிக்கு அழைத்தால் யாருடன் கூட்டணி வைப்பீர்கள் என்ற கேள்விக்கு நான் எப்போதுமே தனியாகத்தான் போட்டியிடுவேன், இதுவரை தனித்துத் தான் களம் கண்டுள்ளேன் என்றார் சீமான்.
