இலங்கை அணியுடன் மூன்று இருபது ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் அடங்கிய தொடரில் பங்கேற்க இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த இரு விதமான கிரிக்கெட் போட்டிகளில் முதலாவதாக இருபது ஓவர் போட்டி நடத்தப்பட்டது. இருபது ஓவர் உலக சாம்பியன் என்ற அசுர பலத்தோடு விளையாடிய இந்திய அணியின் நேர்த்தியான ஆட்டத்திறகு ஈடு கொடுக்க முடியால் இலங்கை அணி மண்ணைக் கவ்வியது.
எளிதாக வெல்லக் கூடிய வாய்ப்பு இருந்த மூன்றாவது மற்றும் இறுதி இருபது ஓவர் போட்டியில் கடைசி நேரத்தில் தடுமாறிய இலங்கை அணி வெற்றியை தவற விட்டது. இலங்கை அணியின் ஜாம்பவான் அதிரடி வீரரான சனத் ஜெயசூர்யா அந்த அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போதும் இலங்கை விளையாடிய விதம் கடுமையான விமர்சனகங்களை மட்டுமே பெற்றுத் தந்தது.
இலங்கை அணியை பொறுத்த வரை மூன்று போட்டிகளைக் கொண்ட இருபது ஓவர் தொடரின் முடிவு சோகத்தையே கொடுத்திருந்தது. மூன்று போட்டிகள் கொண்ட ஐம்பது ஓவர் தொடரின் முதல் போட்டி நேற்று கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடந்தது. இருபது ஓவர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்த ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நேற்றைய ஒரு நாள் போட்டியில் விளையாடினர்.
பகல் இரவு ஆட்டமாக நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் தடுமாறியது. நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து இருநூற்றி முப்பது ரன்களை எடுத்தது. இலங்கை அணியின் ஆல்-ரவுண்டர் டுனித் வல்லலிகே அறுபத்தி ஏழு ரன்களை குவித்தார். துவக்க வீரர் நிஸாங்கா ஐம்பத்தி ஆறு ரன்களை குவித்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தனர்.
இந்திய அணியின் பேட்டிங் பலத்தை வைத்து பார்க்கும் போது இலங்கை நிர்ணயித்த இரு நூற்றி முப்பத்தி ஒன்று என்பது எளிதாகவே தென்பட்டது. அதற்கு ஏற்றார் போல் துவக்க வீரரும் அணித்தலைவருமான ரோஹிட் சர்மா தனது அதிரடியை காட்டினார். ஐம்பத்தி எட்டு ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் சர்மா வல்லலிகே பந்து வீச்சிற்கு தனது விக்கெட்டினை பறிகொடுத்தார்.
அதன் பின்னர் வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று ஆடததால் நாற்பத்தி ஏழு புள்ளி ஐந்து ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இருநூற்றி முப்பது ரன்களை மட்டுமே எடுத்தது. இரு அணிகளும் ஒரே ஸ்கோரை எடுத்ததால் எத்தரப்பிர்கும் வெற்றி தோல்வியின்றி ஆட்டம் சம நிலையில் ( டை ) முடிவடைந்தது. பேட்டிங்கில் அதிரடி காட்டிய வல்லலிகே பந்து வீச்சிளும் அசத்தி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இலங்கை பந்து வீச்சாளர்கள் வனிந்து ஹசரங்கா, சரிதா அசலங்கா ஆகியோர் ஆக்ரோஷமாக பந்து வீசி தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சமீப நாட்களாக கத்து குட்டி அணிகளுடனான் போட்டிகளில் கூட தோல்வியை சந்தித்து வந்த இலங்கை அணி, இந்தியாவுடனான போட்டியை சமன் செய்ததன் மூலம் புத்துணர்ச்சி பெற்றுள்ளதாக தெறிகிறது. எத்தனை தோல்விகளை பார்த்தாலும் நாங்களும் ஒரு காலத்தில் உலக சாம்பியன்கள் தானே என்ற உற்சாக நினனப்போடு இலங்கை அணி அடுத்த போட்டிகளில் மிகப்பெரிய எழுச்சியை பெறும் என்பதுவே அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கையாகவே பார்க்கப்படுகிறது.