latest news
சிறுத்தை மாதிரி இருந்தவர்…சிறுத்துப் போய்விட்டார்…திருமாவளவன் மீதான தமிழிசையின் ரைமிங் விமர்சினம்……

விடுதலை சிறுத்தைகள் கட்சித தலைவர் திருமாவளவன் நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாடு பங்கேற்க தமிழகத்தின் எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என திருமாவளவன் பேசியிருந்த வீடியோ வெளியாகி பேசும் பொருளானது. இந்த சூழலில் திருமாவளவன் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.
அதன் பின்னர் தேசிய மது விலக்கு கொள்கை குறித்து பேசியிருந்தார் திருமாவளவன். இது குறித்த பேசிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வரை சந்திக்கும் முன்னர் மது விலக்கு மாநாடு விஷயத்தில் சிறுத்தையாக ஆரம்பித்தார் சந்திப்பிற்கு பிறகு சிறுத்துப் போய் விட்டார் என ‘ரைமிங்’காக பேசி திருமாவளவனை விமர்சித்துள்ளார். மாநாடு குறித்து தான் சமீபத்தில் படித்த புதுக்கவிதையை மேற்கோள் காட்டி விமர்சித்தார்.

Tamilisai Thirumavalavan
மரங்களை வெட்டும் கோடாரிகள் எல்லாம், மரம் வெட்ட வேண்டாம் என்ற மாநாட்டில் கலந்து கொண்டனவாம் என தான் படித்த கவிதையை சொல்லி மது ஒழிப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்பது குறித்த தனது விமர்சனத்தை முன் வைத்தார்.
மது ஒழிப்பு என்ற உயரிய கொள்கையை தனது சுயநலத்திற்காக பயன்படுத்தி வருகிறார் திருமாவளவன் என்றும், திருமாவளவன் நடத்த உள்ள இந்த மது ஒழிப்பு மாநாட்டு எந்த வித தாக்கத்தையும் தமிழக மக்களிடம் ஏற்படுத்தப்போவதில்லை, ஆனால் இந்த இரு கட்சிகளுக்கு இடையே இருக்கும் நெருக்கத்தை மட்டுமே குறிக்கும் திருமாவளவன் அக்டோபர் மாதம் நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாடு எனவும் பேசினார் பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன்.
