ரோட்டை மறிக்க வைத்த கோட்…எல்லை மீறிய விஜய் ரசிகர்கள்?…

0
24
The Goat
The Goat

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள “தி கோட்” படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. நேற்றைய தினம்  தமிழகத்தில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சிறப்பு காட்சி இன்று காலையில் திரையிடப்பட்டது.

தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் அதிகாலையிலேயே படம் திரையிடப்பட்டது. ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்பினிடையே இன்று இந்த படம் வெளியாகி இருக்கிறது. விஜயின் “தி கோட்” திரைப்படத்தினை வரவேற்கவும், கண்டு ரசித்து மகிழவும் இன்று அதிகாலை முதலே தமிழகத்திலுள்ள அவரது ரசிகர்கள் தங்களை தயார்படுத்தி வந்த வண்ணமே இருந்தனர்.

மதுரையில் இருபது திரையரங்குகளில் விஜயின் “தி கோட்” படம் வெளியான நிலையில் தவுட்டுசந்தை, பெரியார் நிலையம், தெற்கு வாசல் பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ரசிகர்கள் முழுக்கமிட்டபடியும், கூச்சலிட்டபடியும் சாலையில் பேரணியாக சென்றனர்.

Goat
Goat

இதனால் அந்த பகுதி முழுவதும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது விஜய் ரசிகர்கள் சிலர் திடீரென சாலையில் சென்ற பேருந்துகளை மறித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் அங்கு அசாதாரண நிலை இருந்து வந்ததாகவும் செய்திகள் தெரிவித்தது. இந்நிலையில் மானாமதுரையில் இடைவேளைக்கு பிறகு சிறிது நேரம் படம் திரையிடப்படாமல் நிறித்தி வைக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

படம் ஓடிக்கொண்டிருக்கும் போது ஆடியோ இல்லாமல் ஓடத்துவங்கியததால் ரசிகர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனால் அந்த திரையரங்க நிர்வாகம் படத்தை காட்டாமல் நிறுத்தி வைத்தனர். தனது அரசியல் பிரவேசத்தை விஜய் மேற்கொண்ட பிறகு வெளியாகியுள்ள அவரது முதல் படம் இது என்பதாலும் “தி கோட்” படம் அதிக கவனத்தை பெற்றுள்ளதாக விமர்சகர் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.

 

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here