latest news
அது பற்றி எனக்கு தெரியாது…திருமாவளவன் கொடுத்த திருப்பம்…

ஆட்சியயிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் பேசியிருந்த பழைய வீடியோ இன்று காலை அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த வீடியோ விஷயத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை தமிழகம் வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின், இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருந்த பழைய வீடியோ அவரது எக்ஸ் தளத்தில் வெளியானது.
ஆனால் சிறிது நேரத்திலேய அந்த வீடியோ திருமாவளவனின் எக்ஸ் பக்கத்திலிருந்து அழிக்கப்பட்டது. இது குறித்து மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய திருமாவளவன் இந்த வீடியோ அழிக்கப்பட்டது குறித்து தனக்கு தெரியாது, இதைப் பற்றி தனது அட்மினிடம் விளக்கம் கேட்க இருப்பதாகவும் சொன்னார்.

Thirumavalavan Anbumani ramadoss
மது ஒழிப்பு மாநாட்டிற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், மது என்பது பொதுப் பிரச்சனை திமுகவும், அதிமுகவும் மது ஒழிப்பிற்கு ஆர்வம் கொண்டுள்ள கட்சிகள், அதனால் யார் வேண்டுமானாலும் இந்த மாநாட்டில் பங்கேற்கலாம் என அழைப்பு விடுத்ததாக பேசினார்.
மது ஒழிப்பு கொள்கையில் உறுதியாக இருந்தாலும், கடந்த காலங்களில் தங்களது கட்சிக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இருந்த மனக்கசப்புகளால் தான் அவர்களுக்கு அழைப்பு விடுக்க முடியவில்லை என்றும் சொன்னார். அதிமுகவிற்கு அக்டடோபர் மாதம் இரண்டாம் தேதி விசிக சார்பில் நடத்தப்பட உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடப்பட்ட நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
