latest news
பவன் கல்யாண் உதயநிதி இடையே உரசல்…சனாதனத்தை பற்றிய பேச்சால் எழுந்துள்ள சர்ச்சை…

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் இடையே வார்த்தைப் போர் துவங்கியுள்ளது. சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு பவன் கல்யாண் எதிர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். இதனால் இரு மாநில துணை முதல்வர்களிடையே கருத்து மோதல் துவங்கியுள்ளது.
சனாதானம் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பேசியிருந்தார். அப்போது சனாதனம் என்பது வைரஸ் போன்றது என சொல்லியிருந்தார். இதற்கு ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் தனது கருத்தினை சொல்லியிருந்தார்.

Pawan Kalyan
சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள் அழிந்து போவீர்கள். உங்களைப் போலவே நிறைய பேர் வந்து போய் விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணின் கருத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் தமிழக துணை முதல்வர் உதயநிதி. பவன் கல்யாண் கருத்து குறித்து பொறுதிருந்து பார்க்கலாம் ‘LET’S WAIT AND SEE’ என தனது காரில் அமர்ந்து சிரித்தபடியே பதிலளித்துள்ளார்.
திருப்பதி கோவில் லட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருந்த நேரத்தில் திரைப்பட நடிகர் கார்த்தி பட விழா ஒன்றில் பேசியிருந்ததற்கு கார்த்தியை கடுமையாக கண்டித்து தனது கண்டனத்தினை தெரிவித்திருந்தார் பவன் கல்யாண்.
தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டால் அதற்கு தான் மன்னிப்பு கோருவதாக கார்த்தி பதிலளித்திருந்தார். இந்நிலையில் சனாதனம் குறித்து துணை முதல்வர்கள் இருவரும் பேசியுள்ள காரணத்தினால அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
